தூத்துக்குடியில் சைக்கிள் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமண பாண்டியன் மகன் தேவராஜ் (70). இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். நேற்று சைக்கிளில் திருச்செந்தூர் – தூத்துக்குடி மெயின் ரோட்டில் தெற்கிலிருந்து வடக்காக வந்து கொண்டிருக்கும்போது எதிர் திசையில் வந்த ஹைட்ரா எஸ்கார்ட் கிரேன் வாகனம் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடை்நத தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஒட்டி வந்த குளத்தூர் மேட்டு பனையூரரைச் சேர்ந்த பெரியசாமி நம்பிராஜன் (30) என்பவரை கைது செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.


