தூத்துக்குடியில் வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.
தமிழக வருவாய் துறையில், காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும், மக்களுக்கு சான்றுகளை விரைந்து வழங்கிட அனைத்து வட்ட அலுவலகத்திற்கும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், கருணை அடிப்டை பணிநியமனத்திற்கான உச்ச வரம்பை 25% உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. இதனால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பல தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


