தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவு செய்வதில், விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை முதற்கட்ட முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று, நாளை (ஆக.3,4 ல்) சிறப்பு முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முதற் கட்ட முகாம் ஜீலை 24 முதல் ஆகஸ்ட் 2 வரை 600 ரேஷன் கடைகளின் கார்டுதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இம்முகாமில் இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாத விடுபட்ட கார்டுதாரர்கள் பதிவு செய்ய வசதியாக இன்றும், நாளையும் (ஆக.3,4) சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மின் கட்டண ரசீது ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


