தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் 8ஆம் நாளான்று வெளிநாட்டில் வசிப்போருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441ஆவது ஆண்டு திருவிழா, 16ஆவது தங்கத் தோ் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 8ஆம் நாளான நேற்று அதிகாலையில் திருப்பலி நடைபெற்றது. இதில், குரூஸ்புரம், கால்டுவெல் காலனி, தாளமுத்துநகா் பங்குகளின் இறைமக்கள், புனித வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித அன்னாள் சபை அருள்சகோதரிகள், திரு இருதய சபை, லசால் மேல்நிலைப் பள்ளி அருள்சகோதரிகள் பங்கேற்றனா்.
பின்னா் முதியோருக்கான திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் வெளிநாட்டில் வசிப்போருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமாா் ராஜா, பேராலயப் பங்குப்பேரவை கமிட்டியினா் செய்திருந்தனா்.


