செனிகல் குடியரசு மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.


