தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தூத்துககுடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையின் சார்பாக ஈகை திருநாள் தொழுகை அல் மஸ்ஜீதுன் நூர் பழைய பள்ளிவாசல் திடலில் வைத்து நடைபெற்றது இதில் மதுரை மாவட்ட பேச்சாளர் ஈசா பரீத் கலந்துகொண்டு பேசினார். ஆண்களும் , பெண்களும் இந்த திடல் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீழ்கண்டவாறு ஈசா பரீத் பேசினார்.
ரமசான் மாதத்தில் கடந்த 30 நாட்களும் நோன்பிருந்து இறுதியில் இறைவனின் அருளால் இந்த பெருநாள் தொழுகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு சந்தோஷமாக கொண்டாடி வருகிறோம், பெருநாள் கொண்டாட்டங்களுக்கு முன்பாக ஏழைகளுக்கு வழங்குவதற்கு கடமையாக்கப்பட்டுள்ளது. பித்ரா எனும் தர்மத்தின் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை தர்மமாக வழங்கி ஏழை எளியோரும் இந்த நாளில் மகிழ்ச்சியோடு பெருநாளை நல்ல உணவு உண்டு கொண்டாடுவதை உறுதி செய்துள்ளோம். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் , அன்பையும் போதிக்கும் வகையில் இப்பெருநாள் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த தொழுகையில் கிளை தலைவர் சாதீக, செயலாளர் அப்துல் காதர் , பொருளாளர் கரீம் பாட்சா, துணை தலைவர் வாசிம், துணை செயலாளர் அப்துல் கனி, எம்.என்.கே. மீரான், ஹம்சா உள்பட பலர்கலந்துகொண்டனர்.


