நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 2008 திரு விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக தீப ஆராதனையும், கலச அபிஷேகமும், அம்மனுக்கு திரவிய மகா அபிஷேகமும் நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற குத்துவிளக்கு திருவிளக்கு பூஜையில் 2008 பேர் கலந்து கொண்டனர். இப் பூஜையில் நாசரேத் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


