தூத்துக்குடியில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.40 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (03.05.2023) மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16.70 இலட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 20 பார்வையற்ற மற்றும் காது கேளாதோர்களுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பிலான இலவச திறன்பேசிகளையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் ஆ.பாலகுருசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


