தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி திரவியபுரம் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்த் மகன் ஹரிஷ் (23), சேகர் மகன் வசந்த் (23) மற்றும் பி அன் டி காலனியைச் சேர்ந்த பரமசிவன் மகன் சத்திய பிரகாஷ்ராஜ் (21) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 850 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.2100 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


