நீர் நிலைகளை பாதுகாக்க இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 10,000 பனைமரக்கன்றுகள் நடும் பணியை ஆழ்வை பி.டி.ஓ. வளர்மதி துவக்கி வைத்தார்.
************
நீர் நிலைகளை பாதுகாக்க கரையோரங்களில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சென்னை தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் பனைமரக் கன்றுகள் நடும் பணியை ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வளர்மதி துவக்கி வைத்தார்.
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 2019 ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை ஓரங்களிலும் , புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும், தீவு பகுதிகளிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், மற்றும் சாலை ஒரங்களிலும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு மற்றும் மாநாடுகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்சியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சென்னை தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க, நீர் நிலைகளான தாமிரபரணி ஆற்று கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஒடை கரையோரம், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் தடுக்க கடற்கரையோரங்களிலும் மற்றும் குலத்தாங்கரை போன்ற நீர் நிலைகளில் 10 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடும்பணி துவக்க விழா நல்லூர் மேல குளத்தங்கரையில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதுநிலை மேலாளர் என்.ரஞ்சித், தலைமை தாங்கினார். மேலாளர் ஜி. சிவக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செ. தமிழரசன் முன்னிலை வகித்தார். நீர் நிலைகளின் கரையோரங்களில் 10 ஆயிரம் பனைமர கன்றுகள் நடும் பணியை ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வளர்மதி பனை மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார் .
விழாவில் ஊராட்சி செயலாளர் மாரிராஜ், கணினி உதவியாளர் சரவணன் பணித்தள பொறுப்பாளர் செல்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனரும், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளருமான எஸ். பானுமதி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி, ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி மற்றும் பணியாளர் சிறப்பாக செய்திருந்தனர்.


