சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார்.


