ஸ்ரீமூலக்கரை உயர்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் ஸ்ரீமூலக்கரை எம். கே. உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பாக மத்திய அரசின் போஷான் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு பேட்மாநகரம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சாதிக்அலி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி, மருத்துவர் ராம்சர்மா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்ரமணியன், ஊராட்சி செயலர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது வளர் இளம் பெண்களே நாளைய தாய்மார்கள் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க வளர் இளம் பெண்கள் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து பற்றாக்கறையை போக்கும் விதமாக ஊட்டச்சத்துடன் பெண் பிள்ளைகள் வளர வேண்டும். ரத்தசோகையை தடுக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை பள்ளி மாணவிகள் தெரிந்து கொள்ளும் பொருட்டு தானியங்கள் பழ வகைகள் காய்கறிகள் மற்றும் நிலக்கடலைமிட்டாய் போன்ற ஊட்டச்சத்து குறிப்புகளை அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவர் ராம்சர்மா மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி ஆகியோர் விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உதவியாளர் உமாபதி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாரியம்மாள், மாரிதங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் பக்கீர்பாத்திமா, இசக்கியம்மாள், சரஸ்வதி, முத்துமாரி, இந்திராணி, ஜோதிலட்சுமி, ஜெயப்பிரியா, முத்துகுமாரி, சொர்ணசுந்தரி, ஈஸ்வரி, மனோன்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஸ்ரீவைகுண்டம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துணை அலுவலர் நிர்மலா நன்றி கூறினார்.