கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டி குடோனில் நேற்று காலை 8:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்து (42) மற்றும் கணேசன் (47) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


