
ஆழ்தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பாக இன்று கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கருத்துரை வழங்கினார்.