தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்குமவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா மற்றும் பொன்விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார்.
ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, பொருளாளர் செய்யது இப்ராஹீம் முஷா, மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது, மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி உறுப்பினர் சம்ஷர் கான் என்ற ராஜா, செய்யத் இப்ராஹிம் பாதுஷா, காதர் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் அபூபக்கர் சித்திக், ஹாங்காங் நாட்டு பள்ளி இமாம் சஜவு நூர் அலிம், காயல்பட்டினம் அரபிக் கல்லூரி தலைவர் பாசில் அஸ்ஹப் பாஸி, சாரா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முகமது நாசர், கைசர் ,அகமது அஷ்ரப், மரைக்காயர், பர்கான் அலி, முகமது சலீம், அப்துல் கபூர், முகமது உசேன், முகமது ரஃபீக், முகமது உமர் பாரூக், உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
அனைவரையும் அரபிக் கல்லூரி தலைவர் சகாப்தி வரவேற்று பேசினார் மன்சூலா அரபிக் கல்லூரி செயலாளர் அபூபக்கர் ஆண்டறிக்கை வாசித்தார் இதில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா, பேராசிரியர்கள் அம்ஜத் அலி, செய்யத் அப்பாஸ் அலி, முகமது இஸ்மாயில், காஜா மைதீன், செய்யத் அப்பாஸ் அலி, முஹம்மது கனி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முன்னாள் துறைமுகபள்ளிவாசல் இமாம் என்.எம்.கே.நூருல்லாஹ் ஆலிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, ஆகியோர் மாணவர்களுக்கு மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், அரசு காஜி முஜிபுர் ரகுமான் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், சதக்கத்துல்லா, கிராண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய நலச் சங்க தலைவர் ஏ கே மைதீன், உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரபிக் கல்லூரி பொருளாளர் சையது சுலைமான் நன்றி கூறினார். முடிவில் உலக நன்மைக்காக தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் ஷேக் முகமது மிஸ்பாஹி துவா ஓதினார்.


