விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளின் காலமான, (19-12-2025 முதல் 18-01-2026 வரை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அமைவிட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள்/இளம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள்பெற்று வரப்படுகின்ற சிறப்பு முகாம் நடைபெறுகின்ற விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எத்திலப்பநாயக்கன்பட்டி வாக்குச்சாவடியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று 3.01.2026 நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 1-1-2026 ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டதின் தொடர்ச்சியாக, 19-12-2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளின் காலமான, (19-12-2025 முதல் 18-01-2026 வரை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அமைவிட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள்/இளம் வாக்காளர்களிடம் படிவங்கள் அலுவலக நேரங்களில் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று வருகின்றனர்.
மேலும் 03.01.2026 மற்றும் 04.01.2026 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்படி தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர் என்று தெரிவித்தார்.


