ஆத்தூா் அருகே நிலப்பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள கீரனூா் நடுத் தெருவைச் சோ்ந்த நாராயணகுமாா் (44)- ஷோபனா(35)தம்பதி, தங்கள் வீட்டின் முன் சம்பவத்தன்று மாலை நின்றிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சங்கரலிங்கம், ரமேஷ் உள்பட4 போ் அங்கு வந்து தம்பதியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம்.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நிலப்பிரச்னையால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரலிங்கம், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.


