தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் பொற்செல்வன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 12 வட்டாரங்கள் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது
இதில் இன்று நமது கருங்குளம் வட்டாரத்தில் அகரம் முத்தாலங்குறிச்சி கலியாவூர் மற்றும் விளாத்திகுளம் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது என் முகாமில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டது முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு முத்துக்குமார வெங்கடேசன் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்


