தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சந்தரவேல்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி நாகஜோதி (29). இந்த தம்பதியர் கடந்த நவ.30ம் தேதி தாளமுத்துநகர் அருகேயுள்ள எம்ஜிஆர் நகரில் நடந்த திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து நாகஜோதி அணிந்திருந்த 4பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சந்தியாகு மகன் அர்னால்டு (25), லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் சிங்கரன் (22) ஆகிய 2பேரும் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரை கைது செய்து நகையை மீட்டனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


