தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமம், மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரபுத்திரன். இவரது மகள் வீரலட்சுமி (19), ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து வீரபுத்திரன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் தமிழரசு மனைவி ஜான்சி (25). இவரை கடந்த 30ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து அவரது கணவர் தமிழரசு, உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லையாம். இதுகுறித்து அவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


