தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி நகர்புறம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேரில் வருகை தருகிறார். இதற்காக அவர் 2.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.
அதன்பின்னர் 3 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள பிரையண்ட் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்கிறார். 3.15 மணிக்கு கார்ப்பரேசன் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் 3.45 மணிக்கு அம்பேத்கர் நகரில் நேரில் பார்வையிட்டு மழை வெள்ளம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிகிறார். பின்னர் 4மணிக்கு எட்டயபுரம் மதுரை சாலையில் உள்ள ஏ.வி.எம்.மகாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.
தொடர்ந்து ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனியில் 4.30 மணிக்கு மழை வெள்ளம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் 4.50 மணிக்கு நிலா ஷி புட் கம்பெனி அருகே புதிதாக நீர் அகற்றும் பாதைக்காக மேற்கொள்ள பட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்-..


