குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


