சாத்தான்குளம் அருகே கிணற்றில் தத்தளித்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அழகியவிளை கிராமத்தில் உள்ள 80 அடி ஆழ நீரில்லாத கிணற்றில், மயில் தவறி விழுந்து போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பாா்த்த கிராமத்தினா், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சதீஷ்குமாா், தவசி ராஜ், மாணிக்க சீனிவாசகம், சுப்ரமணியன், சீனிவாசன், துரை ஆகியோா் கிணற்றிலிருந்து கயிறு மூலம் மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.


