கொங்கராயகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆபிதா அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், இலவச வீட்டு மனை பட்டா, வறுமைக்கோட்டுக்கு கீழ் இணைத்தல், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு குடியிருப்பு பட்டா, முதியோர் உதவித்தொகை, என மொத்தம் 162 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஜல் ஜீவன் குடிநீர் கிணறு உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக ஏற்றப்பட்டு விரைவில் அந்தந்த துறை சார்ந்த அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் அருணா, கிராம உதவியாளர் ஆனந்த், ஊராட்சி செயலர் பிராங்கிளின், ஊராட்சி மன்ற துணை தலைவர் சேர்மத்துரை மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் காவல் துறையினர்கள், சுயஉதவி குழுவினர்கள், ரேஷன் கடை பொருப்பாளர் ஆழ்வார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


