செய்துங்கநல்லூர் சித்தா மருத்துவ மனையை மீண்டும் திறக்க வேண்டு ம் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் சுந்தர் நகரில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். பற்றாளர் யூனியன் அலுவலக உதவி அலுவலர் குணசெல்வி முன்னிலை வகித்தார். ஊராட்சி எழுத்தர் சங்கர பாண்டியன் தீர்மானங்களை வாசித்தார். மொத்தம் 47 தீர்மானங்கள் இந்த கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூரில் சித்தா ஆஸ்பத்திரியை மீண்டும் நிரூவ வேண்டும், இவ்வூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தினை ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும் , செய்துங்கநல்லூர் நூலகத்துக்குக் குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து தருவது உள்படப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விவசாயச் சங்கத் தலைவர் குமார், சமூக சேவகர் சுடலை முத்து, வார்டு உறுப்பினர்கள் பட்டு ராஜா, முருகன், மற்றுமொரு முருகன் நூலகர் லட்சுமணன், வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


