தூத்துக்குடியில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளை சார்பாக இலவச குடை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளை சார்பாக மாதந்தோறும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக வெயிலால் சிரமப்படுகின்ற சாலையோரங்களில் உள்ள சிறு வியாபாரிகள் 25 பேருக்கு இலவச குடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் பொருளாளர் விக்னேஷ் ஆதரவற்றோருக்கு ஆதரவாய் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், அலுவலக உதவியாளர் ஸ்டாலின், யோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


