நாசரேத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருமறையூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
திருமறையூர் மறுரூப ஆலயத்தின் 17 வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 35 வது ஆலய அசன பண்டிகையை முன்னிட்டு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியின் புல்தரை மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தி னராக சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் கோயில்ராஜ் கலந்து கொண்டனர். இப்போட்டியை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் துவக்கி வைத்தார்.
பாலிடெக்னிக் பர்சார் தனபால் முன்னிலை வகித்தார். நாசரேத் மற்றும் அதில் சுற்று வட்டாரத்தில் இருந்து 14 அணிகள் பங்கு பெற்றது. இறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் அணியினர் மற்றும் திருமறையூர் அணியினர் விளையாடினர். இதில் திருமறையூர் அணியினர் முதலாவது இடத்தை பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் திரும றையூர் அணிக்கு வழங்கினார். இரண்டாம் பரிசை திருமறையூர் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேவதாஸ் நாசரேத் மர்காஷிஸ் அணிக்கு வழங்கினார்.
நடுவர்களாக ஆசிரியர் தனபால் விமல் சுதாகர் மற்றும் ஜேசு கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு மண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால்,தேவதாஸ்,சேகரசெயலா ளர் ஜான்சேகர், கமிட்டி உறுப்பினர் பிரவீன், அசன கமிட்டி தலைவர் பாக்கியராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் பர்சார் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மக்கள் இப்போட்டியை கண்டு களித்தனர். போட்டிகளுக் கான ஏற்பாடுகளை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் முன்னிலையில் சேகர கமிட்டி மற் றும் அசன கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனையின் பேரில் ராஜ்கு மார், பிரவீன், ஆலன் ஜெரேமியா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


