தூத்துக்குடியில் ஜல துர்க்கை அம்மன் ஆலயத்தின் 53வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஜல துர்க்கை அம்மன் ஆலயத்தின் 53வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பல்வேறு விதமான மலர்கள், வளையல் எலுமிச்சை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உலக நன்மை வேண்டியும், வயநாடு நில சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவல் தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில்அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, அறங்காவல் குழு உறுப்பினர்கள் சாந்தி, பிஎஸ்கே ஆறுமுகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை நடைபெறும் விளக்கு பூஜையில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.


