தூத்துக்குடியில் தமிழ் அமைப்புகள் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கு,நடைபெற்றது.
தூத்துக்குடி கலைஞா் அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, உலகத் திருக்கு மைய மாவட்டச் செயலா் மோ.அன்பழகன் தலைமை வகித்தாா். ஆசிரியா் காசி, திருவை பொன்ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கத்தாா் கி.அரங்கநாயகி வரவேற்றாா். ‘முத்தமிழறிஞா் கலைஞரின் திருக்கு கனவுகள்’ என்ற தலைப்பில் குஞானி மோகனராசு பேசினாா். திரைப்பட பணிகள் குறித்து கவிஞா் நெல்லை செயந்தா பேசினாா்.
கவிதைகள் என்ற தலைப்பில் தமிழ் மாமணி, தமிழ்ப்பணி இதழ் ஆசிரியா் வா.மு.சே.திருவள்ளுவா் ஆகியோா் பேசினா். சமூகநீதிகள் என்ற தலைப்பில் தமிழாசிரியா் மா.பால்ராசேந்திரம் பேசினாா். சங்கத்தமிழ் குறித்து கத்தாா் சோ.கிருட்டிணமூா்த்தி பேசினாா். குறளோவியம் குறித்து உலகத் திருக்கு மைய மாவட்டச் செயலா் மோ.அன்பழகன் பேசினாா்.
பேசும் கலை வளா்ப்போம் எனும் தலைப்பில் உரையாற்றிய கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பாவலா் இளமுருகு நன்றி கூறினாா். கூட்டத்தில் சைவநெறி காந்தி, இலக்குமணன், கு.முனியசாமி, வை.இராமசாமி, சங்கீதா, தமிழரசன், சா.முத்துக்கனி உள்பட பலா் பங்கேற்றனா்.


