சாத்தான்குளம் அருகே 20 கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள எள்ளுவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜன் மகள் கலைச்செல்வி (வயது36). இவர் வீட்டில் கடந்த மூன்று வருடமாக கோழிகள் வளர்த்து பராமரித்து வருகிறாராம். தினமும் கோழிகளை திறந்து மாலையில் அடைப்பது வழக்கம். இதைபோல் சம்பவத்தன்று வீட்டில் இருந்து கோழிகளை திறந்துவிட்டு மாலையில் கூட்டில் அடைவதற்கு கோழிகளை தேடியுள்ளார்.
கோழிகளை காணவில்லையாம் . வீட்டின் பின்பக்கம் உள்ள கருவைகாட்டில் சென்று பார்த்தபோது 20 கோழிகள் இறந்து கிடந்துள்ளது.கோழிகளை மர்ம நபர் விஷம் வைத்து கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் உதவி ஆய்வாளர் நெல்சன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


