தருவைகுளம் புனிதஅந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேறற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தருவைக்குளம் புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருப்பவனி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து நவநாள் திருப்பலி நடக்கிறது. வருகிற 12-ந் தேதி காலை 5.45 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கோடி அற்புதரின் சப்பர பவனி, தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி காலை 5.45 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.


