தூத்துக்குடி அருகே மகள் இறந்த துக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பார்வதி (32), கச்சேரி தளவாய்புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில நர்சாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரது 6 வயது பெண் குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டது. இதனால் பார்வதி மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


