தூத்துக்குடியில் சுமார் 2000 விசைப்படகு தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 2000 விசைப்படகு தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கி உரையாற்றினார்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சில்வஸ்டர், ஜெரோம், ஜவகர், பிரகாசம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், வீராங்கனை அமைப்பைச் சேர்ந்த பாத்திமா பாபு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, AITUC மாவட்டத் தலைவர் லோகநாதன் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் /ப்ளோரன்ஸ், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்சலின், பவானி மார்ஷல், வட்டச் செயலாளர்கள் டென்சிங், மனோ, பொன்ராஜ், சுரேஷ் மகாராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மீனவர் அணி நிர்வாகி சேசையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


