நான் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து கடந்த 01.07.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றேன். பொறுப்பேற்றது முதல் இன்று வரை காவல்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன். நான் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு நட்புடனும், சகோதரத்துவத்துடனும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களிடமிருந்து விடைபெற்றுச் செல்வது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், மறுபுறம் கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் தங்களிடமிருந்து பிரியா விடைபெறுகிறேன்.