ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன்,அருணாசலம், ரஞ்சிதம் ஜெபராஜ்,கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் அண்ணாமலை, பாண்டி, வார்டு தலைவர்கள் தனுஷ், மகேந்திரன், மகாலிங்கம், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


