திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவையின்
86 _வது மாதாந்திரக் கூட்டம் திருநெல்வேலி
கூலக் கடை வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பேரவையில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
முனைவர் கோ கணபதி சுப்ரமணியம், கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி, கவிஞர் சிவ.ராமச்சந்திரன், முன்னிலை வகித்தனர்.
கவிஞர் காந்திமதி வேலன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், தி .மு கழகத்தின் மத்திய மாவட்ட தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் கவிஞர் ஸ்ரீராம் எழுதிய “செம்மொழியான தமிழ் மொழி (நூற்றாண்டு கோரிக்கையும் கலைஞர் கண்ட தீர்வும்) என்ற வரலாற்று ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.
நூலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வெளியிட, மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் நூலகர் முனைவர் பாலசுப்பிரமணியம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.…பாளை அரிமா சங்கத் தலைவர் ஜவஹர் துரை அடுத்த பிரதியை பெற்றுக்கண்டார். பட்டிமன்ற நடுவர் புத்தனேரி செல்லப்பா, திருநெல்வேலிதமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன், “கலைமாமணி” சந்திரா புஸ்பம் ,நெல்லை டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் முனைவர் தம்பான், முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், முனைவர் திரிபுரசுந்தரி ,பிரபு , மீனாட்சிநடராஜன்,கவிஞர் மூர்த்தி, கவிஞர் உக்கிரன்கோட்டை மணி,தச்சை மணி ,முனைவர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினார் .
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் நேர்முக உதவியாளர் மாணிக்கவாசகம், எழுத்தாளர் சிவகுருநாதன் நூலறிமுகம் செய்தனர்.
நூலாசிரியர் கவிஞர் ஸ்ரீராம் ஏற்புரை ஆற்றினார். வழக்கறிஞர் நடராஜன் நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக மாணவி ஆவுனாபாலனின் பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்தில் மயில்,ரவிச்சந்திரன், முத்துராமன், சொர்ணவல்லி ,புன்னைச்செழியன், அகவைமுதிர்ந்த தமிழறிஞர் சங்கத்தின் மாநிலத்து தலைவர் சுப்பையா , உஷா, சுகந்ததேவி போன்ற ஏராளமானான் இலக்கிய ஆர்வலர்கள் கலந்த கொண்டனர்.


