ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுத்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு முதல் திருச்செந்தூர் வரை பழனி வழியாக செல்லக்கூடிய விரைவு ரயில் வண்டியை, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் ஏற்றிச் செலலும் வகையில் நிறுத்தி செல்ல கோரி பொதுமக்கள் சார்பாக செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் மனு அளித்துள்ளார்.
இந்த பாலக்காடு முதல் திருச்செந்தூர் வரை செல்லக்கூடிய ரயில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றுக் கொண்டிருந்த பயணியர் ரயில் , விரைவு ரயிலாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மேற்கண்ட மூன்று ரயில் நிலையங்களுக்கும் நின்று செல்லாமல் செல்கிறது. இது தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி அடைவதுடன் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் மற்றும் ஏற்கனவே மேற்கண்ட ரயில் பயணியர் ரயிலாக சென்று கொண்டிருந்தபோது மேற்கண்ட மூன்று ரயில் நிறுத்தங்களிலும் நின்று சென்றதைப் போலவே, தற்போது இயக்கப்படும் பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயில் வண்டியை மூன்று நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சி தலைவர் ஆலோசனையில் பேரில் தேர்தல் நடத்தை விதிகளால் தற்போது பொதுமக்கள் பேராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் நேரில் கொடுத்திருப்பது நல்ல முடிவை ரயில் நிர்வாகம் எடுக்கும் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


