நெல்லையில் பொருநை இலக்கியத் திருவிழா இரண்டு நாள்கள் நடந்தது. இரண்டாவது நாள் நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த தொல்லியல் களம் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 முதல் 4.20 வரை நடந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், கல்வெட்டு ஆய்வாளர் சங்கர நாராயணன் ஆகியோர் பேசினர் . நெறியாளராக நெல்லை அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி கலந்துகொண்டு நிகழ்ச்சியை நெறி படுத்தினார். நல் நூலகர் முத்து கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தாசில்தார் கனகராஜ் பேச்சாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.


