திங்கள் காலை 8.00 மணியளவில் ஏரல்-விஸ்வகர்மா கலை வளாகத்தில் தமிழக திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 62 வது வருட நினைவஞ்சலி நடைபெற்றது. பாரதீய ஜனதா அமைப்பு சாரா மாநில தலைவர் முத்துமாலை ஆச்சாரி அவர்கள் தலைமையேற்று மலர் தூவி ஆரம்பித்து வைத்தார்கள்.பசி போக்கும் தளத்தின் பொறுப்பாளர் கற்குவேல் ஐயப்பன், ஆச்சாரி யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் ஆச்சாரி, மாணவச் செல்வங்கள் முத்துராம், சந்தன ஹரிஸ் போன்ற சமூக ஆர்வலர்கள், காலை நேர மழையிலும் கடமை உணர்வோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் பாகவதர் சிறப்புகளை எடுத்துரைத்து நன்றி கூறினார்.


