மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபர் 1 ம் தேதி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
அவ்வண்ணம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ச.பொற்செல்வன், கோவில்பட்டி துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஜெ.வீ.பா.குணசேகரன் ஆகியோர் வழிகாட்டுதல்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள கிராமங்கள் மற்றும் காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்பு உள்ள கிராமங்களில் 12 வட்டாரங்களிலும் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் மொத்தம் 51 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்றது.
மொத்தம் முகாமில் பங்கேற்றவர்கள் 3127 காய்ச்சல் கண்டு சிகிச்சை பெற்றவர்கள் 27 பேர் இம் முகாம் நடைபெறும் கிராமங்களில் கொசுப் புழு ஒழிப்பு பணியும் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் (DBCs) வீடு தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள பொதுமக்களுக்கு நலக் கல்வியும் அறிவுறுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாநகராட்சியிலும், கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் நகராட்சிகளிலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டெங்கு கொசு பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
எனவே பொதுமக்கள் அனைவரும் இம் முகாம் நடைபெறும் இடங்களில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்திடவும், ரத்தப் பரிசோதனைகள் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் முகாம்களை பயன்படுத்தி காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும் தங்கள் வீட்டிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் கொசுப்புழு உருவாவதை தடுக்க மழை நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாகவே மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடாமல் மற்றும் போலி மருத்துவர்கள் அணுகி சிகிச்சை மேற்கொள்ளாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளவும், இம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நாள்தோறும் நடக்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மழைக்கால மருத்துவ முகாமினை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.பொற்செல்வன் செல்வன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். மேலும் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமிலும் துணை இயக்குனர் கலந்து கொண்டார். அருகில் காயமொழி வட்டார மருத்துவ அலுவலர்
மரு.ஃபாசிநோ, காயாமொழி நடமாடும் மருத்துவக் குழு அலுவலர் டாக்டர்.அகல்யா, ஆகியோர் உள்ளனர்.


