விடியல் டிரஸ்ட் நிறுவனமானது விளாத்திகுளம் பகுதியை மையமாக கொண்டு நபார்டு வங்கியுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் கே. சுப்பிரமணியபுரம், கே.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பஞ்சாயத்து கிராமங்களில் நீர் வரத்து கால்வாய் அமைத்தல் ஊரணி ஆழப்படுத்துதல் போன்ற பணிகளையும் அதேபோன்று தனிநபர் நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல் போன்ற பணிகள் மூலமாக நீர் வடிப்பகுதிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் சேவை செய்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உர மேலாண்மை போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் கொடுத்து பணி செய்து வருகிறது.
தற்போது காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கே.வெங்கடேஸ்வரபுரம் நீர்வடி பகுதியில் தூய்மையே சேவை நிகழ்வை இன்றைய தினம் விடியல் டிரஸ்ட் நிறுவனம் மற்றும் நபார்டு வங்கியுடன் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் விடியல் டிரஸ்ட் நிறுவன தலைவர் முனைவர். திரு. K. ஜோதிமணி, திருநெல்வேலி கிளை நபார்டு வங்கி துணை பொது மேலாளர் திரு. R. சுரேஷ் ராமலிங்கம், கே.வெங்கடேஸ்வரபுரம் நீர்வடிப்பகுதி குழு தலைவர் திரு.S.P.ராஜேந்திரன் நீர்வடி பகுதி செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. M.மகேஸ்வரி திருமதி. கிருஷ்ணம்மாள் ஆகியோர் பங்கேற்பு செய்தனர். நிகழ்வில் தூய்மையே சேவைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் கே.வெங்கடேஸ்வரபுரம் தெருக்களில் இருந்த குப்பைகளை நீர்வடி பகுதி தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்புடன் சேகரிப்பு செய்தனர். இந்த நிகழ்வில் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களும் பங்கேற்பு செய்தனர். மேலும் மரக்கன்று நடும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை நீர்வடி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. M.பிரியா மற்றும் திருமதி. J.நித்யா செய்திருந்தார்கள். இறுதியாக நீர்வடி பகுதி திட்ட மேலாளர் திரு.M.அசோக் குமார் பங்கேற்பு செய்த அனைவருக்கும் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


