தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் வரலாறு , சிறுகதை, நாவல், ஆன்மிகம், களரி அடிமுறை,தொல்லியல், ஜமீன்தார்கள் வரலாறு, களரி அடிமுறை, சுதந்திர போராட்ட தியாகிகள், மலைப்பயணம், சித்தர்கள் தரிசனம், தாமிரபரணி பயணம் என சுமார் 85க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் ஆதிச்சநல்லூரில் அமைய காரணம் இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகும். சமீக காலமாக எழுத்துலகில் இவரது எழுத்து கவனிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது, கலை பண்பாட்டு த்துறை சார்பில் கலை நன்மணி விருது, தூத்துக்குடி மாவட்ட சிறந்த தனி நபர் நூலகர் விருது போன்ற அரசு விருது உள்பட பல விருதுகளை பெற்றவர். இவருக்கு படைப்பு சார்பில் வழங்கப்படும் பிரபல விருதான படைப்பு சுடர் விருது வழங்கப்பட்டது.
படைப்பு சங்கமம் சார்பில் விருது தொடர்ந்து 10 ஆண்டுகளாக வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். 2025 ஆண்டு விழா சென்னையில் தியாகராஜ நகர் சர். பிடி தியாகராஜர் கலையரங்கத்தில் நடந்தது. இதில் படைப்பு ஆளுமைய விருதுகள் வழங்கப்பட்டது. இதில் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு வழங்கப்பட்டது. படைப்புச்சுடர் விருது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு வழங்கப்பட்டது. இதில் அவருக்கு நினைவு பரிசு மற்றும் 10 ஆயிரம் பரிசுதொகை வழங்கப்பட்டது. இந்த விருதை படைப்பு நிறுவனர் ஜின்னா, ராஜா, சலீம்கான் உள்பட படைப்பு இலக்கியவாதிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு படைப்பு செம்மல் விருது எழுத்தாளர் முத்து அவர்களுக்கும், இலக்கிய செம்மல் விருது ஜில்லேல்லா பாலாஜி , கவிஞர் இளம்பிறை ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடகத்துறை ராமசாமி, இளம் சாகித்ய அகாடமி விருதாளர் ராம் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் கலந்துகொண்டார். திரைப்பட இயக்குனர்கள் லிங்குசாமி, சரண், நித்திலன் சாமி நாதன், மைக்கேல் ராசு, நந்தா பெரியசாமிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.