தூத்துக்குடியில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் மூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்தார். விழாவில், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.