கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தை எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.
இந்தியா முழுவதும் செப்- 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை பணியாளருக்கு மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் குருநாத், ரயில்வே பாதுகாப்புபடை சப் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ பிரியங்கா, ஜெயசிங் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை சேகரித்து, மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,