செய்துங்கநல்லூரில் கண் நோய் தீர்க்கும் கண்ணம்மாள் என அழைக்கப்படும் புனித பிரகாசியம்மாள் ஆர்.சி ஆலயத்தில் சப்பர பவனி நடந்தது. இதையட்டி கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து தினமும் திருப்பலி நடந்தது. இன்று காலை சிறப்பு திருப்பலிக்கு பிறகு சப்பர பவனிநடந்தது. இதில் ஆர்.சி.கோயில் தெரு, சி.எஸ்.ஐ.கோயில் தெரு, மெயின்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய இடங்களில் சப்பர பவனிநடந்தது. இந்த பவனியில் ஏரளாமான பக்தர்கள் உப்பு மிளகு பூ போட்டு பிரகாசியம்மாளை வணங்கி நின்றனர்.

பவனியில் ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்–குதந்தை ஜாக்சன் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் கமிட்டியினர் இறைமக்கள் செய்திருந்தனர்.


