கரீனா கபூர் ( பிறப்பு செப்டம்பர் 21, 1980), அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். இவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், இவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, இவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அவ்வாண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார் . மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும். மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.
2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார். சமேலி (2004) என்ற படத்தில் அவர் ஒரு விலை மாதுவாக நடித்தது அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்ந்தது. மேலும் அதனால் அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான பரிசும் கிடைத்தது. அதற்குப்பிறகு அவர் பிலிம்பேர் விழாவில், சிறந்த நடிகை என்று திறனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட விருதுகளை தேவ் (2004) மற்றும் ஓம்காரா (2006) என்ற படங்களில் திறம்படத்தக்க என்று ஆர்பரிக்கப்பட்ட வகையில் நடித்ததற்கு இரண்டு விருதுகளை பெற்றார்.
2007 ஆம் ஆண்டில், இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வீ மெட் என்ற காதல்நயம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் அவருடைய செயல்திறனுக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை ஈட்டினார். அவர் நடித்த படங்களால் பாக்ஸ் ஆப்பீஸ் (கல்லாப்பெட்டி) பணப்பெட்டியில் குவிந்த வருமானத்தொகை மாறுபட்டிருந்தாலும், கரீனா தன்னை ஒரு முதன்மையான தற்காலத்து நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார். கரீனாவின் நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஊடகங்கள் காரணமாக எப்பொழுதும் செய்தி கிடைப்பதற்காக நிருபர்கள் பின்தொடர்ந்து சூழ்ந்துகொண்டே இருப்பதால் அவளைப் பற்றியும், அவளுடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவலாக உலவியது.
பஞ்சாபி கத்திரி வம்சத்தை மூலமாகக் கொண்ட திரைக்குடும்பமான கபூரின் இல்லத்தில் மகாராட்டிரத்தில் உள்ள மும்பையில் பிறந்தவர், நடிகர்களான ரந்தீர் கபூர் மற்றும் பபிதா (அல்லது சிவதாசினியின்) மிகவும் இளைய மகளாவார். இவர் நடிகரும் படத்தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பேத்தியாவார், நடிகர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப் பேத்தியாவார், நடிகை கரிஸ்மா கபூரின் தங்கையாவார் மற்றும் நடிகர் ரிஷி கபூரின் உடன் பிறந்தவரின் மகளுமாவார். கரீனா சொல்வதன்படி, “கரீனா” என்ற பெயர் அன்ன கரேனினா என்ற புத்தகத்தில் இருந்து பிறந்ததாகும். இவளுடைய தாயார் அவளை கருவில் சுமந்த போது அந்த புத்தகத்தை அவர் படித்தார். அவரை இயல்பாகவே அடிக்கடி பெபோ என்ற பெயரிலும் செல்லமாக அழைப்பதுண்டு.
குழந்தைகளாக இருக்கும் போதே, கபூர் சகோதரிகள் நடிகைகளாக வரவேண்டும் என்று கனவு கண்டனர். குறிப்பாக நடிகைகளான நர்கீஸ் மற்றும் மீனா குமாரி கபூரை மிகவும் கவர்ந்தவர்கள். இருந்தாலும், இவர்களுடைய குடும்பப்பின்னணி அப்படி அமைந்தபோதும், அவளுடைய தந்தை பெண்கள் படங்களில் நடிப்பதை விரும்பவில்லை ஏன் என்றால் அவ்வாறு செய்வதால் அவளால் தன் குடும்பத்திற்குள்ள கடமையை சரிவர செய்ய இயலாமல் போகும் என்ற நம்பிக்கையே ஆகும். இதனால் அவளுடைய பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வலுத்தது, முடிவில் கபூரின் தாயார் கரீனாவின் தந்தையை பிரிந்து வந்து விட்டார். 1991 ஆம் ஆண்டில் கரிஸ்மா ஒரு நடிகையாக அறிமுகமாகும்வரை, லோகன்ட்வாலா என்ற இடத்தில் அவரது தாயார் அவர்கள் இருவரையும் வளர்க்கும் சுமையை ஏற்றுக்கொண்டார் மேலும் அவர்களை கரையேற்ற பல இடங்களில் பணிபுரிந்தார்.
கரீனா முதலில் மும்பையிலுள்ள ஜமுனாபாய் நாற்சீ பள்ளிக்கூடத்தில் படித்தார், அதன் பிறகு தெஹ்ரா தூன்னில் உள்ள வெல்ஹாம் பெண்கள் விடுதிப்பள்ளியில் படிக்கச்சென்றார். மும்பையில் விலே பார்லெயில் உள்ள மிதிபாய் கல்லூரியில் அவர் இரண்டு வருடங்களுக்கு வர்த்தகம் படித்தார். இருந்தாலும், அங்கு படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை, ஆனால் இவர் தன் குடும்பத்தின் அருகாமையில் இருந்ததால் படிப்பதை தொடர்ந்து வந்தார். அதற்குப்பிறகு கரீனா அமேரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் மைக்ரோ கம்ப்யூட்டருக்கான மூன்று மாத வேனில்காலத்து பயிற்சி வகுப்பிற்காக தன்னை பதிவுசெய்து கொண்டார். பிறகு சட்டப்படிப்பில் அவர் கவனம் சென்றது மேலும் சர்ச்கேட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். இருந்தாலும், சர்ச்கேட்டில் ஒரு வருடகாலம் முடிந்தபிறகு, கரீனா திரும்பவும் தனது நீண்டநாள் கனவான நடிகை ஆவதற்கு திட்டமிட்டார் மேலும் அந்தேரியிலுள்ள கிஷோர் நாமிட் கபூரின் நடிப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் பெறத்தொடங்கினார்.


