தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வருகிற 5ஆம் தேதி வ.உ.சியின் போராட்டங்கள் குறித்த நவீன நாடகம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கலையரங்கத்தில் வருகிற 5ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணிக்கு வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சியின் போராட்டங்கள் குறித்த விரிசுடர் செம்மல் நவீன நாடகம் நடைபெறுகிறது. நவீன நாடகத்தில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். நாடகத்தை நமச்சிவாயம் இயக்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி எம்பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, பாளை., தூய சவேரியார் கலை மனைகள் அதிபர் அருட்தந்தை ஹென்றி ஜெரோம், பாளை., தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்தந்தை தாமஸ் அலெக்சாண்டர் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.


