ஆறுமுகநேரி சாகுபுரத்தில் நடந்த வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தமிழக அரசு ஆண்டு தோறும் பாரதியார் நினைவு மற்றும் குடியரசு தின வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. அதேபோல் இந்தாண்டு திருச்செந்தூர் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கேரம் போட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி முதலிடம் பிடித்தார். 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கேரம் போட்டியில் சிவகாமி 2ம் இடத்தையும், கேரம் இரட்டையரில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் நூறுலைன் அப்ரின், கிருஷ்ணவேணி ஆகியோர் இடம் பிடித்தனர். மாணவர்களுக்கான 17 வயதுக்குட்பட்ட கேரம் போட்டியில் கோகுல்நாத் 2ம் இடம் பெற்றார். மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில் முத்து செந்தில்குமார், வினோத் ஆகியோர் 2ம் இடம் பிடித்தனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் 800 மீட்டர் ஓட்ட போட்டியில் திவாகர் முதலிடத்தையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 600 மீட்டர் ஓட்ட போட்டியில் சிவலிங்க ராகுல் 3ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தர்ஷிதா 2ம் இடத்தையும், 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஹேமா அபிஷ்கா 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்டோர் ஒரு பிரிவில் வர்ஷினி முதலிடத்தையும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முத்துலட்சுமி 2ம் இடத்தையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் இசக்கிபாரதி 2ம் இடத்தையும் பிடித்தனர்.
17 வயதுக்குட்பட்டோர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் மாணவர் முத்துராஜா 2ம் இடத்தையும், மாணவர் வசந்த் 3ம் இடத்தையும் பிடித்தனர். 19 வயதுக்குட்பட்டோர் தடை தாண்டும் ஓட்ட பாலதினேஷ் 2ம் இடத்தையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் நவீன் ராஜ் முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் வெற்றிவேல் 2ம் இடத்தையும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் வர்ஷினி முதலிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, தினேஷ்குமார், காந்தி ஆகியோரை பள்ளி செயலாளர் முருகன், செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர் ஜெசுதாசன், ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலா தேவி மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.


