திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பெரியசாமி அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து மேயர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக திருச்செந்தூரில் 10 நாட்கள் நடைபெறும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்காக சிறப்பு தூய்மை பணியாளாளர்கள் குழுவினரை வழியனுப்பி வைத்தேன் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


