எட்டயபுரம் அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் முனீஸ்வரன் (22). இவரது மனைவி வீரலட்சுமி. கடந்த ஓராண்டுக்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. முனீஸ்வரன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். மேலும் பல இடங்களில் கடன் வாங்கி செலவழித்தாராம்.
இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, வீரலட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதில் மன வேதனை அடைந்த முனீஸ்வரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


